பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க தடை

பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க தடை

பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க தடை
Published on

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஓமர் லூலூ என்பவரின் இயக்கத்தில் பிரியா வாரியர் நடிக்கும் மலையாள திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இந்தப்படத்தின் 'மாணிக்ய மலரே பூவி' என்ற பாடலில் பிரியாவின் புருவ அசைவுகள் மற்றும் கண் சிமிட்டல்கள் ஒரே நாளில் வைரலானது. அத்துடன் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது. ஆனால் இந்தப் பாடல் நபிகள் நாயகத்தை தொடர்புபடுத்தி இஸ்லாமிய மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக ஐதராபாத் காவல் நிலையத்தில் வழக்குத் தொடர்ப்பட்டது. இதைத்தொடர்ந்து அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் உள்ள ஜின்சி காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்யுக்கோரி நடிகை பிரியா வாரியர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தான் நடித்துள்ள பாடல் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைப்பெற்றது.

இதில் நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேபோல் மகாராஷ்டிரா, ஹைதராபாத்தில் காவல்நிலையங்களில் தரப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com