சினிமா
உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை...!
உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை...!
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் ’நிமிர் ’. தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ’கண்ணே கலைமானே’ என்ற படத்திலும் ’இரும்பு திரை’ இயக்குனர் பி.எஸ் மித்ரனின் அடுத்த படதிலும் நடிக்க இருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் அட்லியின் உதவி இயக்குனர் இயக்கும் பெயரிடப்படாத அடுத்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ’மேயாத மான்’ படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிரியா பவனி சங்கர் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். இது அவருடைய ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. பிரியா பவானி சங்கர் இதுக்கு முன்பு டி.வி. சீரியலில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது