ட்விட்டரில் 2 மில்லியனை தொட்டார் ப்ரியா ஆனந்த்

ட்விட்டரில் 2 மில்லியனை தொட்டார் ப்ரியா ஆனந்த்

ட்விட்டரில் 2 மில்லியனை தொட்டார் ப்ரியா ஆனந்த்
Published on

நடிகை பிரியா ஆனந்தை ட்விட்டரில் 2 மில்லியன் ஆட்கள் பின் தொடர ஆரம்பித்திருக்கின்றனர். ஏறக்குறைய இருபது லட்சம் நபர்களின் அன்பை சம்பாதித்த சந்தோஷத்தில் அவர் இருக்கிறார். 

வாமனன், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்தவர் ப்ரியா ஆனந்த். மாயவரம் பெண் இவர். ஆனால் அமெரிக்காவில் வளர்ந்தவர். இவரை ட்விட்டர் கணக்கில் 2 மில்லியன் பேர் பின் தொடர ஆரம்பித்துள்ளார்கள். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.  இந்த 2 மில்லியன் நபர்களின் அன்பே என்னுடைய சிரிப்புக்கான காரணம். உங்களது அனைவரின் அன்புக்கும் நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com