சினிமா
யாருக்கும் சொல்லாமல் திருமணம் ஏன்?: சின்னத்திரை பிரியா விளக்கம்
யாருக்கும் சொல்லாமல் திருமணம் ஏன்?: சின்னத்திரை பிரியா விளக்கம்
பிரபல சின்னத்திரை நடிகை பிரியா சத்தம் போடாமல் திருமணம் செய்துள்ளார்.
பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ப்ரியா. அதன் பிறகு அனைவராலும் அறியபட்ட இவர், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி” தொடரிலும் நடித்தார். அதன் பிறகு பல்வேறு ரியாலிட்டி ஷோவிலும் இவரை பார்க்க முடிந்தது. இப்போது அவருக்கு திருமணம் எளிமையாக நடந்தாக தகவல் வெளியாகி உள்ளது. அது பற்றி அவரை கேட்டதற்கு, திருமணம் என்பது என்னுடைய ஃபெர்சனலான விசயம் என நினைகிறேன். அதை ஏன் நான் எல்லாரிடமும் சொல்லி கொண்டு இருக்கனும் என்று சொல்லும் அவர் ஆனாலும் எந்தச் சடங்குகளும் மிஸ் ஆகாதபடி அந்த மூணு நாளும் கொண்டாட்டமாவே இருந்தது என்கிறார். மணம் முடித்த கையோடு தாய்லாந்திலுள்ள “க்ராபி’ தீவுகளுக்கு தேனிலவுக்கும் சென்று வந்ததாகவும் தெரிகிறது