\
கொரோனாவிலிருந்து மீண்டு காவல்துறை அதிகாரியாக நடிக்கும்  பிரித்விராஜ்!

கொரோனாவிலிருந்து மீண்டு காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பிரித்விராஜ்!

கொரோனாவிலிருந்து மீண்டு காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பிரித்விராஜ்!
Published on

கொரோனாவிலிருந்து மீண்டு படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் நடிகர் பிரித்விராஜ்!

தமிழில் பாரிஜாதம், மொழி, ராவணன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். ‘மலையாள சினிமாவின் தந்தை’ என்று போற்றப்படுபவரும், மலையாள சினிமாவில் முதன் முதலில் பட்டியலின பெண்ணை ஹீரோயினாக நடிக்க வைத்தவருமான தமிழர்  ஜே.சி டேனியலின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’செல்லுலாய்ட்’ படத்தில் ஜே.சி டேனியலாக நடித்து பெரும் பாராட்டுகளைக் குவித்தார் பிரித்விராஜ்.

இப்படத்திற்கு கேரள அரசின் 7 மாநில விருதுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தகது. தமிழிலும் இப்படம் வெளிவந்து விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்விராஜ் மோகன்லாலை வைத்து கடந்த ஆண்டு ‘லூசிபர்’ படத்தை இயக்கி இயக்குநர் அவதாரமும் எடுத்தார். இப்படம் வசூல் சாதனை செய்தது. இப்படி பன்முகத் திறமைக் கொண்ட பிரித்விராஜ் தனக்கு கொரோனா பாதித்துள்ளது என்பதை சில நாட்களுக்குமுன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

தன்னை தனிமைப்படுத்திக்கொண்டவர் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதாகவும் தனது டெஸ்ட் ரிப்போர்ட் நெகட்டிவ் என்று வந்துவிட்டதாகவும் தெரிவித்ததோடு இன்னும் ஒருவாரம் தனிமைப்படுத்திக்கொள்வேன்” என்றுக்கூறி தனது டெஸ்ட் ரிப்போர்ட்டை வெளியிட்டார். இந்நிலையில், இந்த ஒருவாரம் முடிந்த பிறகு பிரித்விராஜ் இயக்குநர் தனு பாலக் இயக்கிவரும் புலனாய்வு த்ரில்லர் படமான ‘cold case’ கலந்துகொள்ளவுள்ளார். இப்படத்தில், காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com