\
’கேஜிஎஃப்’ பிரஷாந்த் நீலின் ‘சலார்’: பிரபாஸுக்கு வில்லனாக மிரட்ட வரும் பிரித்விராஜ்

’கேஜிஎஃப்’ பிரஷாந்த் நீலின் ‘சலார்’: பிரபாஸுக்கு வில்லனாக மிரட்ட வரும் பிரித்விராஜ்

’கேஜிஎஃப்’ பிரஷாந்த் நீலின் ‘சலார்’: பிரபாஸுக்கு வில்லனாக மிரட்ட வரும் பிரித்விராஜ்
Published on

‘சலார்’ படத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார் என்பதை நடிகர் பிரபாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ‘கேஜிஎஃப் 2’ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின், படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்துவிட்டாலும் கொரோனா பரவலால் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. அதற்குள், பிரபாஸுடன் இணைந்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார் பிரஷாந்த் நீல். நாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் தொடங்கவிருக்கிறது. வரும் அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், ‘சலார்’ படத்தின் வில்லனாக நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். ’ராதே ஷ்யாம்’ வரும் மார்ச் 11 ஆம் தேதி வெளியாவதையொட்டி கொச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரபாஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ’கேஜிஎஃப் 2’ படத்தின் கேரள உரிமையை நடிகர் பிரித்விராஜ் தான் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com