பிரேம்ஜி அமரனின் 'சத்திய சோதனை': ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

பிரேம்ஜி அமரனின் 'சத்திய சோதனை': ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

பிரேம்ஜி அமரனின் 'சத்திய சோதனை': ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட சிவகார்த்திகேயன்!
Published on

இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும் நகைச்சுவை நடிகருமான பிரேம்ஜி அமரனின் ‘சத்திய சோதனை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

விதார்த், ரவீனா ரவி நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு கிடாரியின் கருணை மனு’ விமர்சன ரீதியாக பாராட்டுக்களைக் குவித்தது. எழுத்தாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கொண்டாடித்தள்ளிய, இப்படத்தை இயக்கியவர் சுரேஷ் சங்கையா. இவர் தற்போது, பிரேம்ஜி அமரனை வைத்து சத்திய சோதனை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

காந்தியின் சுயசரிதை நூலான சத்திய சோதனை தலைப்பையே படத்தின் தலைப்பாக வைத்து காவல்துறை கதைக்களத்தோடு எடுக்கப்பட்டுள்ளது. இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயேன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு “கிடாரியின் கருணை மனு படத்தை மிகவும் ரசித்தேன்.

இப்போது, இயக்குநரின் அடுத்தப் படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. பெரிய வெற்றியை குவிக்க படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com