\
’ஜெய் பீம்’ படத்தை தயாரித்ததற்காக சூர்யாவை நினைத்து பெருமைப்படுகிறேன்: அல்போன்ஸ் புத்திரன்

’ஜெய் பீம்’ படத்தை தயாரித்ததற்காக சூர்யாவை நினைத்து பெருமைப்படுகிறேன்: அல்போன்ஸ் புத்திரன்

’ஜெய் பீம்’ படத்தை தயாரித்ததற்காக சூர்யாவை நினைத்து பெருமைப்படுகிறேன்: அல்போன்ஸ் புத்திரன்
Published on

’ஜெய் பீம்’ படத்தினை ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பாராட்டியுள்ளார்.

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான ‘ஜெய் பீம்’ பெரும் வரவேற்பைப் பெற்று பாராட்டுகளைக் குவித்து வருகிறது. தா.செ ஞானவேல் இயக்கிய இப்படம் ஏற்கனவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுக்கொண்டு வருகிறது. ஆஸ்கர் தகுதிப் படங்கள் பட்டியலுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதோடு ஆஸ்கர் யூடியூப் பக்கத்திலும் இடம்பிடித்து சாதனை செய்துள்ளது. படத்தினை பலரும் பாராட்டிவரும் நிலையில், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ‘ஜெய் பீம்’ படத்தினை பாராட்டியுள்ளார்.

"'ஜெய் பீம்' படம் பார்த்தேன். மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இந்த படத்தை துணிச்சலுடன் தயாரித்ததற்காக சூர்யா சார் மற்றும் ஜோதிகா மேடமை நினைத்து பெருமை கொள்கிறேன். இத்திரைப்பட குழுவினருக்கு எனது அன்பை தெரிவித்துக் கொள்கிறேன். ஆஸ்கார் யூடியூப் சேனலில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள படங்களில் 1.7 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஒரே படம் ஜெய் பீம்" என அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com