உருவ கேலிக்குள்ளான காஜல் அகர்வால் - ட்ரோல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி

உருவ கேலிக்குள்ளான காஜல் அகர்வால் - ட்ரோல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி
உருவ கேலிக்குள்ளான காஜல் அகர்வால் - ட்ரோல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி

கர்ப்பிணியாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தனது புகைப்படங்களை பகிர்ந்ததை அடுத்து, நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது சமூக வலைத்தளங்களில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், கடந்த 2020 ஆண்டு, கவுதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து துபாயில் தனது விடுமுறை நாளை கழித்து வரும் காஜல் அகர்வால், கர்ப்பிணியாக இருக்கும் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தநிலையில், அவர் நெட்டிசன்களால் உடல் கேலிக்கு உள்ளாகி உள்ளார். 

இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “எனது வாழ்க்கையில், எனது உடலில், எனது வீட்டில் மிக குறிப்பாக என்னுடைய பணியிடத்தில் அற்புதமான புதிய மாற்றங்களை சமீப காலமாக நான் சந்தித்து வருகிறேன். மேலும், குறிப்பிட்ட சில கருத்துக்கள், உடல் கேலி பதிவுகள், மீம்கள் எதற்கும் உதவாது. இதனால் இதனை கடந்து கருணையோடு நடந்துகொள்ள கற்றுக்கொள்வோம். கொஞ்சம் கஷ்டம் தான் என நினைக்கிறேன், வாழ்வதும் வாழ விடுவதும்!

இதைப் போன்ற வாழ்க்கை சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு என்னுடைய சில கருத்துகளை இங்கு பகிர்கிறேன். முக்கியமாக இந்த தருணத்தை புரிந்து கொள்ளாத சுயநல முட்டாள்கள் இதனை நிச்சயமாக படிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில், நம்முடைய உடல் எடை கூடுவதையும் சேர்த்து, பல மாற்றங்களை சந்திக்கிறது. கர்ப்ப காலத்தில் நம்முடைய வயிறும், மார்பகங்களும் ஹார்மோன்ஸ் மாற்றங்களால் பெரிதாகிறது. ஏனெனில், குழந்தை வளர்வதற்கு ஏற்ப அதற்கு தேவையான ஊட்டமளிப்பதற்காக நமது உடல் தயாராகிறது.

இதனால் உடல் பெரிதாவதால் சிலருக்கு வரிவரியாக தழும்புகளும் ஏற்படும். சில சமயம் தோல்கள், பருக்களால் உடைந்து போகும். வழக்கத்தை விட அதிகமாக சோர்ந்து போவதுடன், மனநிலையில் மாற்றங்களும் இருக்கும். இந்த மோசமான மனநிலையால், நமது உடல் குறித்து ஆரோக்கியமற்ற அல்லது எதிர்மறையான எண்ணங்களை தோன்றச் செய்யும். அதேபோல், குழந்தை பெற்றெடுத்தப் பிறகு, பழைய மாதிரி நாம் மாறுவதற்கு சில காலம் எடுக்கலாம். மாற முடியாமலே போகலாம். அது ஓ.கே. தான்.

மேலும் இந்த மாற்றங்கள் எல்லாம் இயற்கையானதுதான். நமது வாழ்வில் புதிதாக ஒன்று இணையவுள்ளதற்கு நாம் போராடுகிறோம் (நமது குழந்தையை வரவேற்கும் ஆவலுடன்). இந்த மாற்றங்களை நாம் அசாதாரணமாக உணர தேவையில்லை. நாம் ஒரு பெட்டிக்குள் நம்மை சுருக்கிக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட விதத்தில் (Stereotype) இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. வாழ்வின் அழகான, பிரமிப்பான மற்றும் அற்புதமான கட்டத்தில், நாம் அழுத்தத்திலும், சகித்துக்கொள்ளாமலும் இருக்கவும் தேவையில்லை.

குழந்தை பெற்றெடுக்கும் நிலைகளை பற்றியே நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் அவற்றை அனுபவிக்க கொடுத்து வைத்தவர்கள். இந்த கருத்துகளை நான் எப்போதும் சோகமாக இருக்கும் தருணத்தில், நினைத்து என்னை சரிசெய்து கொள்வேன். இந்தப் பதிவு என்னைப் போன்று, உங்களுக்கும் உதவக் கூடும். அற்புத கட்டத்தில் என்னோடு பயணிக்கும் எல்லோருக்கும் அன்பு கலந்த நன்றி” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தை பிறப்பு ஒன்றே வாழ்க்கையின் கடைசி கட்டம் இல்லை என்றும், கர்ப்ப காலத்தில் யோகா, நீச்சல், நடைப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கர்ப்ப காலத்தில் உங்களது மனநிலை குறித்து, உங்கள் கணவர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசி, நேர்மறையான கருத்துகளுடன் இருங்கள் என்றும், நடிகை காஜல் அகர்வால் அறிவுரை வழங்கியுள்ளார். சமீபத்தில் ‘ஷ்யாம் சிங்க ராய்’ படத்தில் நடித்ததற்காக சாய் பல்லவி உடல் கேலிக்கு உள்ளானநிலையில், தற்போது நடிகை காஜல் அகர்வால் உடல்கேலிக்கு உள்ளாகியுள்ளார். எனினும், பல்வேறு தரப்பினரும் காஜல் அகர்வாலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com