எமி ஜாக்சன் முன்னாள் காதலருக்கு நிச்சயதார்த்தம்!
நடிகை எமி ஜாக்சனின் முன்னாள் காதலரும் இந்தி நடிகருமான பிரதீக் பப்பருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகர் பிரதீக் பப்பர். இவர், இந்தி நடிகர் ராஜ் பப்பர்- மறைந்த நடிகை ஸ்மிதா பாட்டீல் தம்பதியின் மகன். இந்தி படங்களில் நடித்து வரும் இவர், ’விண்ணைத்தாண்டி வருவாயா’-வின் இந்தி ரீமேக்கான ’ஏக் தீவானாத்தா’-வில் நடித்தார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்தப் படத்தில் எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்தார். அப்போது இருவரும் காதலில் விழுந்தனர். பிரதீக், வீட்டிலேயே எமி தங்கியிருந்தார் என்றும் கூறப்பட்டது. அவரின் பெயரை எமி, தனது கையில் பச்சையும் குத்திக்கொண்டார். திருமணம் வரை சென்ற இவர்கள் காதல் திடீரென முறிந்தது.
இந்நிலையில் பிரதீக், சன்யா சாகர் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் லக்னோவில் நேற்று நடந்துள்ளது. இதுபற்றி அறிவித்துள்ள பிரதீக், திருமண தேதி முடிவாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.