\
சென்சார் போர்டு தலைவராக பாடலாசிரியர் நியமனம்

சென்சார் போர்டு தலைவராக பாடலாசிரியர் நியமனம்

சென்சார் போர்டு தலைவராக பாடலாசிரியர் நியமனம்
Published on: 

மத்திய திரைப்படத் தணிக்கை குழுத் தலைவராக தேசிய விருது பெற்ற பாடலாசிரியரும் வசனகர்த்தாவுமான பிரசூன் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய திரைப்படத் தணிக்கை குழுத் தலைவராக 2015ம் ஆண்டு பஹ்லாஜ் நிஹலானி நியமிக்கப்பட்டார். அவர் மீது இந்தித் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க கெடுபிடி செய்ததாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், நேற்று அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
அவருக்குப் பதிலாக பிரபல பாடலாசிரியரும் வசனகர்த்தாவுமான பரசூன் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், மத்திய திரைப்பட தணிக்கை குழுவுக்கு நடிகைகள் கவுதமி, ஜீவிதா, வித்யா பாலன் உட்பட 12 பேர் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com