இமயமலை சென்றார் மோகன்லால் மகன்!

இமயமலை சென்றார் மோகன்லால் மகன்!
இமயமலை சென்றார் மோகன்லால் மகன்!

நடிகர் மோகன்லாலில் மகன் பிரணவ் மோகன்லால் இமயமலை சென்றுள்ளதால் அவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் புரமோஷனில் கலந்துகொள்ளவில்லை என்று இயக்குனர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ். தமிழில் கமல் நடித்து வெளியான ’பாபநாசம்’ படத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இப்போது ஜீத்து ஜோசப் இயக்கும் ’ஆதி’ என்ற மலையாளப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். மற்றும் சித்திக், லேனா, சராபுதீன், மேகநாதன், ஜெகபதிபாபு, அதிதி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிரணவ் கலந்துகொள்ளவில்லை. 

இந்நிலையில் பிரணவ் மோகன்லால், இமயமலைக்குச் சென்றுள்ளதாக இயக்குனர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார். ‘’ஷூட்டிங்கின் போதே இந்தப் படத்தின் புரமோஷனில் கலந்துகொள்ள இயலாது என்று பிரணவ் தெரிவித்துவிட்டார். அதனால் அவர் பங்கேற்கவில்லை. டிரைலரை பார்த்துவிட்டு ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக இருப்பதாக நிறைய பேர் கேட்கிறார்கள். அந்தக் காட்சிகள் யதார்த்தமாகத்தான் இருக்கும். ஒரு மாஸ் பட காட்சிகள் போல இருக்காது. இருந்தாலும் படத்தில் எமோஷனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் 26-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது’’ என்றார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com