கன்னட சிறுகதை எழுத்தாளர் ஆனார் நடிகர் பிரகாஷ் ராஜ்
கன்னடத்தில் சிறுகதை எழுத்தாளராக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிமுகமாகியிருக்கிறார்.
நடிகர் என்ற அடையாளத்தை தாண்டி ஒரு படைப்பாளியாக அறியப்படுபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழில் அவர் எழுதிய கட்டுரைகள் பரவலான வாசகர்களை அவருக்கு சம்பாதித்து கொடுத்தது. வழக்கமான நடிகர் அடையாளத்தை மீறி பொதுவெளியில் பல உண்மைகளை அப்பட்டமாக பேசிய அவரது எழுத்து பலரால் ரசிக்கப்பட்டது. சமீபத்தில் அவர் கன்னட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை பற்றி கூறியிருந்த கருத்துக்கள் பெரிய அளவில் பரபரப்பானது. கமல், ரஜினிக்கு ஒரு ரசிகனாக நான் ஓட்டு போடமாட்டேன் என்று கூட சமீபத்தில் பேசியிருந்தார்.
இந்நிலையில் பிரகாஷ்ராஜ் கன்னடத்தில் எழுதிய சிறுகதை ஒன்று முதன்முறையாக பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருகிறார். மேலும் எனது மற்றொரு பயணம் என்று அதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.