\
பிரபுதேவா ஜோடி ஆனார் நிக்கி கல்ராணி!

பிரபுதேவா ஜோடி ஆனார் நிக்கி கல்ராணி!

பிரபுதேவா ஜோடி ஆனார் நிக்கி கல்ராணி!
Published on

’சார்லி சாப்ளின் 2’ படத்தில் பிரபுதேவா ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு, பிரபுதேவா, அபிராமி, காயத்ரி ரகுநாதன் நடித்து 2002-ல் வெளியான படம், ’சார்லி சாப்ளின்’. காமெடி படமான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகிறது. இதை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். இந்தப் படத்தில் பிரபுதேவா இரண்டு வேடத்தில் நடிக்கிறார். அவர் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக தன்யா நடிப்பார் என்று தெரிகிறது.
இந்தப் படத்துக்கு கிரேசி மோகன் வசனம் எழுதுகிறார். இதன் படப்பிடிப்பு கோவாவில் தொடங்குகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com