நயன்தாரா படத்தில் பிரபாஸுக்கு ஜோடியான தமன்னா... பிரபுதேவாவும் இருக்காராம்!

நயன்தாரா படத்தில் பிரபாஸுக்கு ஜோடியான தமன்னா... பிரபுதேவாவும் இருக்காராம்!

நயன்தாரா படத்தில் பிரபாஸுக்கு ஜோடியான தமன்னா... பிரபுதேவாவும் இருக்காராம்!
Published on

பாகுபலி ஹீரோ பிரபாஸுடன் ஹிந்தியில் உருவாகும் ’காமோஷி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் தமன்னா. 
பாகுபலி- 2 மாபெரும் வெற்றிக்கு பிறகு ’சாஹோ’ தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். அடுத்து அவர் நேரடி ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சித்து வந்தார். இந்நிலையில் தமிழில் நயன்தாரா நடிப்பில் விரைவில் ரிலீசாக உள்ள ’கொலையுதிர் காலம்’ படத்தின் ஹிந்தி பதிப்பில் நடிக்க இருக்கிறார் பிரபாஸ். இந்தப்படத்தை தமிழில் இயக்கி வருபவர் சாக்ரி டோலொட்டின். தமிழில் உன்னைப்போல ஒருவன் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய இவரே  ஹிந்திப்பதிப்பான ‘காமோஷி’ படத்தையும் இயக்க இருக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளார். பிரபுதேவாவும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். கொலையுதிர் காலம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. 
நாயகியை மையப்படுத்தி உருவாகி வரும் கொலையுதிர் காலம் படத்தை தமிழில் தயாரித்து, இசையமைத்து இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. ஹிந்தி பதிப்பான காமோஷி படத்திற்கும் அவரே இசையைக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com