விரைவில் பிரபுதேவாவுக்கு திருமணம்?

விரைவில் பிரபுதேவாவுக்கு திருமணம்?

விரைவில் பிரபுதேவாவுக்கு திருமணம்?
Published on

இயக்குனர், நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபு தேவா தனது மனைவி ரமலதாவிடமிருந்து பிரிந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபுதேவா குழு நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், படிப்படியாக வளர்ந்து தென்னிந்திய படங்களில் மட்டுமல்ல, இந்தி சினிமா துறையிலும் சிறந்த நடிகர், நடன இயக்குனர் மற்றும் திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார். இவர் பல வெற்றிப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டில், பிரபுதேவாவின் மூத்த மகன் விஷால் மூளை கட்டியால் பாதிக்கப்பட்டு 12 வயதில் இறந்தார். பிரபுதேவா-ரமலதாவுக்கு மேலும் இரண்டு மகன்கள் உள்ளனர். 47 வயதான இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

தற்போது பிரபுதேவா ஒருவரை காதலித்துவருவதாகவும், அவருடன் டேட்டிங்கில் அவர் உள்ளார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com