'ஹரஹர மஹாதேவகி' இயக்குநரின் படத்தில் பிரபுதேவா: இன்று படப்பிடிப்பு தொடக்கம்

'ஹரஹர மஹாதேவகி' இயக்குநரின் படத்தில் பிரபுதேவா: இன்று படப்பிடிப்பு தொடக்கம்
'ஹரஹர மஹாதேவகி' இயக்குநரின் படத்தில் பிரபுதேவா: இன்று படப்பிடிப்பு தொடக்கம்

பிரபுதேவா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. 

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி, நடிகராக உயர்ந்து தற்போது இயக்குநராக இருப்பவர் பிரபுதேவா. இவர் தற்போது இந்தி சினிமாவிலும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். அதே சமயம் தனக்கு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து தமிழில் நடித்தும் வருகிறார்.

அந்த வகையில் தற்போது ‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அந்த திரைப்படத்தை தனுஷின் முன்னாள் மேலாளரும், ‘வெள்ளை யானை’, ‘எனிமி’ படங்களின் தயாரிப்பாளருமான வினோத்குமார் தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு  இன்று  பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் பிரபுதேவாவுடன் வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com