கவனம் ஈர்க்கும் பிரபுதேவாவின் ‘பொய்க்கால் குதிரை’ ஃபர்ஸ்ட் லுக்

கவனம் ஈர்க்கும் பிரபுதேவாவின் ‘பொய்க்கால் குதிரை’ ஃபர்ஸ்ட் லுக்
கவனம் ஈர்க்கும் பிரபுதேவாவின் ‘பொய்க்கால் குதிரை’ ஃபர்ஸ்ட் லுக்

இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'ஹர ஹர மஹாதேவகி', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் உள்ளிட்டோர் ஹீரோயின்களாக நடிக்க இமான் இசையமைக்கிறார். ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் வேம்புலியாக கவனம் ஈர்த்த நடிகர் ஜான் கொக்கனும் இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கிய நிலையில், இன்று படத்தின் தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. ’பொய்க்கால் குதிரை’ என்று தலைப்பிட்டுள்ளனர். தலைப்புக்கேற்ப, பிரபுதேவாவின் முறுக்கேறிய உடல் கட்டும், கையில் இரும்புக் கம்பியை வைத்துக்கொண்டு இருப்பதும் மிரட்டினாலும், இன்னும் மிரட்டலாய் காட்டுவதென்னவோ, அவர் செயற்கை காலுடன் இருப்பதுதான். ஒற்றைக்காலுடன் குழந்தையைக் காப்பாற்றும் சண்டைக் காட்சிபோல் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதைக்களம் என்பதை உணர்த்துகிறது. கவனம் ஈர்த்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக்கை நெட்டிசன்கள் பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com