சினிமா
பா.விஜய் இயக்கத்தில் இணையும் பிரபுதேவா - கலையரசன்: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
பா.விஜய் இயக்கத்தில் இணையும் பிரபுதேவா - கலையரசன்: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமாரின் 'பொய்க்கால் குதிரை', இயக்குநர் கல்யாணின் பெயரிடாதப் படங்களில் நடித்து வரும் பிரபுதேவா பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பாளர் தாணு துவங்கி வைத்தார்.
பிரவுதேவாவுடன் மஹிமா நம்பியார், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். எம்.எஸ் மூவிஸ் சார்பில் முருகன் தயாரிக்கிறார். இப்படத்தை இயக்குவதோடு அனைத்து பாடல்களையும் பா.விஜய்யே எழுதுகிறார். எஸ்.கணேசன் இசையமைக்கிறார்.