தற்காப்பு கலை கற்க சீனா செல்கிறார் பிரபுதேவா

தற்காப்பு கலை கற்க சீனா செல்கிறார் பிரபுதேவா

தற்காப்பு கலை கற்க சீனா செல்கிறார் பிரபுதேவா
Published on

தற்காப்பு கலை கற்பதற்காக, சீனா செல்ல இருக்கிறேன் என்று பிரபுதேவா கூறினார்.

’யங் மங் சங்’ என்ற படத்தில் நடித்துவருகிறார் பிரபுதேவா. அறிமுக இயக்குனர் அர்ஜுன் இயக்கும் இந்தப் படத்தில் பிரபுதேவா ஜோடியாக, லட்சுமி மேனன் நடிக்கிறார். தங்கர் பச்சான், ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடிக்கின்றனர். 
இந்தப் படம் பற்றி பிரபுதேவா கூறும்போது, ’இதன் கதை தற்காப்பு கலையை மையப்படுத்தியது.  அந்தக் கலைக்கு முக்கியத்துவம் உள்ளதால் அதை கற்க இருக்கிறேன். இதற்காக சீனாவுக்கு விரைவில் செல்கிறேன். எனக்கு ஆக்‌ஷன் பிடிக்கும். அதை செயற்கையாக செய்வதில் உடன்பாடில்லை. நடனமும் தற்காப்பு கலையும் கிட்டத்தட்ட ஒன்று போல்தான் இருக்கும். மார்சியல் ஆர்ட்ஸ் கற்பதன் மூலம் என் நடனத்தையும் மேம்படுத்த முடியும் என நினைக்கிறேன்’ என்றார் பிரபுதேவா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com