Prabhas
PrabhasSpirit

பிரபாஸின் One Bad Habit, வெளியான ஸ்ப்ரிட் ஆடியோ டீசர்! | Spirit | Prabhas | Sandeep Vanga

திரிப்தி திமித்ரி, காஞ்சனா, பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Published on

`அர்ஜுன் ரெட்டி', `கபீர் சிங்' மற்றும் `அனிமல்' படங்கள் மூலம் வெகுவாக கவனிக்கப்பட்ட இயக்குநர் சந்தீப் வங்கா. இவர் அடுத்தாக பிரபாஸ் நடிக்கும் `ஸ்ப்ரிட்' படத்தை இயக்கவுள்ளார். நேற்று பிரபாஸின் பிறந்தநாள் என்பதால், `ஸ்ப்ரிட்' படத்தின் One Bad Habit என்ற ஆடியோ டீசர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

`அனிமல்' படத்தின் வெளியீட்டுக்கு முன்பாகவும் இதே போல் ஒரு ஆடியோ டீசரை வெளிட்டு கவனத்தை ஈர்த்தார் சந்தீப் வங்கா. இப்போது பிரபாஸ் முதன் முறையாக போலீஸ் ரோலில் நடிக்கும் படமாக உருவாக இருக்கும் படம் `ஸ்ப்ரிட்' என்பதால் அதனை விவரிக்கும் விதத்தில் இந்த ஆடியோ டீசர் அமைந்துள்ளது. 

ஒரு உயர் அதிகாரி தன் உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்படும் பணியாளருடன் நடத்தும் உரையாடல் மூலம், படத்தில் கதாநாயகனின் வன்முறை தன்மையை சுட்டிக்காட்டுகிறார்கள். இதில் பிரபாஸ் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்றும், அவர் ஒரு காலத்தில் அகாடமியில் முதலிடத்தில் இருந்தார் எனவும், ஆனால் அவரது 'ஒரு கெட்ட பழக்கம்' காரணமாக ரிமாண்ட் கைதியாக மாறுகிறார் என்றும் உணர்த்தி இருக்கிறார்கள்.

திரிப்தி திமித்ரி, காஞ்சனா, பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். `அர்ஜூன் ரெட்டி', `கபீர் சிங்', `அனிமல்' போன்ற படங்களுக்கு பின்னணி இசையமைத்த ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சந்தீப் வங்கா மொத்தப் படத்தையும் ஒரு வருடத்திற்குள் எடுத்து  முடிக்க திட்டமிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com