பிரபாஸின் `ஃபௌஜி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! | Fauzi | Prabhas
பிரபாஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் `சீதா ராமம்' புகழ் ஹனு ராகவப்புடி. இப்படத்தின் அப்டேட் பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
இன்று பிரபாஸ் பிறந்தநாள் ஸ்பெஷலாக பிரபாஸ் - ஹனு கூட்டணியில் உருவாகியுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு, படத்தின் தலைப்பு `ஃபௌஜி' என அறிவிக்கப்பட்டுள்ளது. 1940 காலகட்டத்தில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. ஒரு போர் வீரன் பாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. மான்வி, மிதுன் சக்ரபர்த்தி, ஜெயப்பிரதா, அனுபம் கெர் ஆகியோர் இப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தீப் சாட்டர்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள `தி ராஜா சாப்' ஜனவரி 9, 2026 வெளியாகவுள்ளது. அடுத்து ஹனு ராக்வப்புடியின் `ஃபௌஜி' தயாராகி வருகிறது. இதனையடுத்து சந்தீப் வங்கா இயக்கம் போலீஸ் டிராமா `ஸ்பிரிட்', நாக் அஷ்வின் இயக்கும் கல்கி 2898 AD: பாகம் 2, பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார்: பாகம் 2 – ஷௌர்யாங்க பர்வம் ஆகிய படங்கள் உருவாகவுள்ளது. மேலும் பிரபாஸ் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக `சலார்', `ஈஸ்வர்', `பௌர்ணமி' போன்ற படங்கள் அக்டோபர் 31 அன்று, தெலுங்கு மாநிலங்களிலும், பாகுபலி: தி எபிக் (இரு பாகங்களும் சேர்ந்து) அக்டோபர் 31 அன்று உலகம் முழுக்கவும் ரீ ரிலீஸ் ஆகிறது.