பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' 2022 இல் வெளியீடு !

பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' 2022 இல் வெளியீடு !

பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' 2022 இல் வெளியீடு !
Published on

நடிகர் பிரபாஸ் நடிக்கும் புராண திரைப்படமான "ஆதிபுருஷ்" 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'தன்ஹாஜி' இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்பு இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. பூஷண் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக்கப்பட்டு, இதர மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது.

'ஆதிபுருஷ்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்டர் மூலமாக 'ராமாயணம்' கதையின் ஒரு பகுதியைப் படமாக்குகிறார்கள் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ராமராக பிரபாஸும், ராவணனாக சைஃப் அலி கானும் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 'சாஹோ' மற்றும் 'ராதே ஷ்யாம்' படங்களுக்குப் பிறகு பூஷண் குமார் பிரபாஸ் இணையும் மூன்றாவது படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் 2021-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2022- ஆம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இத்திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com