\
பிரபாஸின் `ஆதிபுருஷ்’ பட டீசர் அயோத்தியில் வெளியீடு - படக்குழு அறிவிப்பு!

பிரபாஸின் `ஆதிபுருஷ்’ பட டீசர் அயோத்தியில் வெளியீடு - படக்குழு அறிவிப்பு!

பிரபாஸின் `ஆதிபுருஷ்’ பட டீசர் அயோத்தியில் வெளியீடு - படக்குழு அறிவிப்பு!
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிப்பில், பிரம்மாண்டாக உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் டீசர் அயோத்தியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன், சைஃப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள படம் `ஆதிபுருஷ்’. இந்தப் படம் இந்தி - தெலுங்கு என இருமொழிகளில் பைலிங்குவல் படமாக தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் வெளியீட்டுக்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு அக்டோபர் 2-ம் தேதி, உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் நடைபெறவுள்ளது.

இந்தப் படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. பிரபாஸ், ராகவா என்ற பெயரில் ராமராகவும், க்ரித்தி, ஜானகி என்ற பெயரில் சீதாவாகவும், சைஃப் அலிகான், லங்கேஷ் என்ற பெயரில் இராவணனாகவும் நடித்துள்ளனர். எனவே ராமரின் பிறப்பிடமாக கருதப்படும் அயோத்தியில் இப்படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்கான ஏற்பாடுகளை பிரம்மாண்டமான முறையில் செய்து வருகிறது படக்குழு. இதனைப் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் ட்வீட் செய்து அறிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தை பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இந்தி தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் படம் வெளியாகவுள்ளது. 3டி மற்றும் ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் படம் உருவாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com