ராஜமவுலியுடன் மீண்டும் இணையும் பிரபாஸ்!

ராஜமவுலியுடன் மீண்டும் இணையும் பிரபாஸ்!

ராஜமவுலியுடன் மீண்டும் இணையும் பிரபாஸ்!
Published on

பாகுபலி படத்தின் முதல் பாகமும், இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றிபெற்று உலக நாடுகளின் கவனத்தை தென்னிந்திய சினிமா மீது ஈர்த்தது. 

இப்படத்தை இயக்கிய ராஜமவுலி, நாயகன் பிரபாஸ் ஆகியோரின் அடுத்தகட்ட பணிகள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாகுபலி படப்பிடிப்பின்போதே ராஜமவுலி பிரபாஸிடம் ஒரு கதை சொல்லியிருந்தாரம். அது பிரபாஸுக்கும் பிடித்துப்போக இருவரும் அந்தக் கதையை படமாக்க முடிவெடுத்துவிட்டனர். ஆனால், தற்போது பிரபாஸ் சாஹோ படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து ராதாகிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கிடையே, ஹிந்தி படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். தற்போது பிரபாஸ் பிஸியாக இருப்பதால், ராஜமவுலி வேறு ஹீரோவை வைத்து வேறொரு படத்தை இயக்க இருக்கிறார். இருவரும் தாங்கள் ஒப்பந்தமாகியுள்ள படங்களை முடித்து விட்டு ஓரிரு ஆண்டுகளில் ராஜமவுலி சொன்ன கதையில் மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்ற முடிவெடுத்திருக்கிறார்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com