\
ஸ்ரத்தா போல் வருமா? புகழ்கிறார் பிரபாஸ்!

ஸ்ரத்தா போல் வருமா? புகழ்கிறார் பிரபாஸ்!

ஸ்ரத்தா போல் வருமா? புகழ்கிறார் பிரபாஸ்!
Published on

பாகுபலி-க்கு பிறகு பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ’சாஹோ’.

சுஜீத் இயக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். நீல் நிதிம் முகேஷ், ஜாக்கி ஷெராப், லால் உட்பட பலர் நடிக்கின்றனர். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஷங்கர் எஹசான் லாய் இசை அமைக்கின்றனர். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரத்தா பற்றி படத்தின் ஹீரோ பிரபாஸ் கூறும்போது, ‘இந்தப் படத்துக்கு ஸ்ரத்தாதான் சரியான சாய்ஸ். அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். சும்மா பாடலுக்காகவும் காதல் காட்சிகளுக்காகவும் வந்து போவது போல அவரது காட்சிகள் இருக்காது. கதையில் அவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் கூட அவர் நடிக்கிறார்’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com