சென்னை எக்ஸ்பிரஸ் இயக்குநரின் அடுத்த படத்தில் நடிக்கும் பிரபாஸ்

சென்னை எக்ஸ்பிரஸ் இயக்குநரின் அடுத்த படத்தில் நடிக்கும் பிரபாஸ்

சென்னை எக்ஸ்பிரஸ் இயக்குநரின் அடுத்த படத்தில் நடிக்கும் பிரபாஸ்
Published on

அஜய் தேவ்கான் நடிப்பில் கோல்மால் படத்தை இயக்கி வரும் ரோஹித் ஷெட்டி அடுத்து பிரபாஸ் நடிக்க உள்ள பாலிவுட் படத்தை இயக்க இருக்கிறார். 

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டி, பிரபாஸ் நடிக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்டார். கோல்மால் படத்தின் ஷூட்டிங் ஐரோப்பாவில் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட  இந்தப் படத்தின் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால் விரைவில் பிரபாஸ் நடிக்க இருக்கும் படத்தின் ஷூட்டிங் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கப்பட இருக்கிறது. கமர்சியல் கலந்த ஆக்சன் படங்களை இயக்குவதில் தேர்ந்தவர் ரோஹித் ஷெட்டி. ஆகையால், பிரபாஸுக்கு அவர் ஆக்சன் கதையையே எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. ரோஹித் ஷெட்டியுடன் பிரபாஸ் இணைந்து பணியாற்ற இருப்பதால் இப்போதே இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com