\
கே.ஜி.எஃப் பட இயக்குநருடன் கைகோக்கும் பிரபாஸ் - வெளியானது ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்

கே.ஜி.எஃப் பட இயக்குநருடன் கைகோக்கும் பிரபாஸ் - வெளியானது ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்

கே.ஜி.எஃப் பட இயக்குநருடன் கைகோக்கும் பிரபாஸ் - வெளியானது ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்
Published on

கே.ஜி.எஃப் பட இயக்குநருடன், நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதியப் படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

பாகுபலி படம் மூலம் உலமெங்கும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இவர் தற்போது கே.ஜி.எஃப் படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘சலார்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பன்மொழித் திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. போஸ்டரில் பிரபாஸ் துப்பாக்கி ஏந்தி முறைத்துக்கொண்டிருக்கிறார். இந்தப் போஸ்டர் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக, பிரஷாந்த் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கன்னட மொழியை தாண்டி தமிழிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பிரஷாந்த் நீல் இயக்கி வருகிறார். இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வருகின்ற ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில்தான் பிரபாஸ் உடன் தனது அடுத்த படத்தில் கைகோர்த்துள்ளார் பிரஷாந்த் நீல். கே.ஜி.எஃப் என்ற மாஸ் பட இயக்குநரும், பாகுபலி என்ற மாஸான படத்தின் ஹீரோவும் இணையவுள்ளதால் இந்தப் படமும் மிகப்பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com