பிரபாஸ் திருமணம் தள்ளிப்போவது ஏன்? ரகசியம் உடைத்தார் ராஜமவுலி !

பிரபாஸ் திருமணம் தள்ளிப்போவது ஏன்? ரகசியம் உடைத்தார் ராஜமவுலி !

பிரபாஸ் திருமணம் தள்ளிப்போவது ஏன்? ரகசியம் உடைத்தார் ராஜமவுலி !
Published on

’பாகுபலி’ படம் இந்தியில் எடுக்கப்பட்டிருந்தால், தேவசேனா கேரக்டருக்கு தீபிகா படுகோன் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்த படம், ‘பாகு பலி’. தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் 2015-ல் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதன் அடுத்த பாகம் ஏப்ரல் 2017-ல் வெளியானது. இந்தப் படமும் இந்தியா முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மொத்தம் ரூ.1500 கோடியை  வசூலித்து ள்ளது.

இந்நிலையில், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இப்போது இயக்கி வருகிறார் ராஜமவுலி.

இந்தி பட இயக்குனர் கரண் ஜோஹர் நடத்தும் டி.வி நிகழ்ச்சி ஒன்றில், பிரபாஸ், ராணா, ராஜமவுலி ஆகியோர் கலந்து கொண் டனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராணா, ‘’பாகுபலி செட்டுக்கு போகும்போது ஏதோ ஸ்கூலுக்கு சென்று வருவது போல இருந்தது. இரண்டு மூன்று பிறந்த நாள்களை அந்த செட்டில்தான் கொண்டாடினேன்’’ என்றார்.

இந்தப் படத்தை இந்தியில் உருவாக்கி இருந்தால் யாரை நடிகர்களாக்கி இருப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்  த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, ’’பிரபாஸையும் ராணாவையும் விட்டுவிட்டு வேறு யாரையும் முடிவு செய்ய மாட்டேன். பிர பாஸ்தான் பாகுபலி, ராணாதான் பல்வாள்தேவன். அதில் மாற்றம் இருந்திருக்காது. ஆனால், அனுஷ்கா நடித்திருந்த தேவ சேனா கேரக்டருக்கு இந்தியில், தீபிகா படுகோன் சிறப்பாகப் பொருந்துவார்’’ என்றார்.

பின்னர் இந்த இரண்டு பேரில் யார் ’பேட் பாய்’ என்று கேட்டபோது, பிரபாஸ்தான் என்று சிரித்துக்கொண்டே சொன்னார் ராஜமவுலி. ராணா வெளிப்படையானவர் என்றும் பிரபாஸ் அப்படிப்பட்டவர் அல்ல, அதிகம் கூச்சசுபாவம் கொண்டவர் என்றும் ராஜமவுலி சொன்னார்.

‘’அவர் சோம்பேறியும் கூட. அதனால்தான் திருமணம் செய்வதிலும் சோம்பேறித்தனமாக இருக்கிறார். ஒரு பெண்ணை கண்டு பிடித்து அப்பெண்ணின் குடும்பத்திடம் பேசுவது அவருக்கு கடினமான வேலையாக இருக்கிறது. அதனால்தான் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அது தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது’’ என்று மேலும் தெரிவித்த ராஜமவுலி, ‘’ஆனால், அவர் சரியான உணவு பிரியர்’’ என்றார்.

பின்னர் அனுஷ்காவுடனான கிசு கிசு பற்றி கேட்டதற்கு, ‘’அவர் என் தோழிதான்’’ என்று பிரபாஸ் கூறினார். ராணாவிடம் த்ரிஷா பற்றி கேட்டபோது, ‘’பத்து வருடத்துக்கும் மேலாக அவர் எனக்கு நல்ல தோழியாக இருக்கிறார்’’ என்றார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com