பாகுபலி பிரபாஸின் ‘சாஹோ’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பாகுபலி பிரபாஸின் ‘சாஹோ’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பாகுபலி பிரபாஸின் ‘சாஹோ’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on


சாஹோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபாஸ் பிறந்தநாளான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகரான பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய அளவில் மேலும் பிரபலமானார். பாகுபலியின் வெற்றியை தொடர்ந்து அவரது அடுத்த படம் குறித்த எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இந்நிலையில் சுஜித் இயக்கத்தில் சாஹோ என்ற படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். நாயகியாக ஷ்ரதா கபூர், அருண் விஜய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபாஸின் பிறந்த நாளான இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com