என்னது ‘ஆதிபுருஷ்’ படம் நல்லா இல்லையா? -பேட்டி கொடுத்த நபரை அடித்து துவம்சம் செய்த பிரபாஸ் ரசிகர்கள்

‘ஆதிபுருஷ்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
Adipurush
AdipurushTwitter

ராமராக நடிகர் பிரபாஸும், ராவணனாக சயீஃப் அலிகானும், சீதாவாக கீர்த்தி சனானும், ராமரின் சகோதரர் லக்ஷமனாக சன்னி சிங்கும் நடித்துள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. வால்மீகி எழுதிய ராமாயணம் கதையை அடிப்படையாகக் கொண்டு, 500 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட பட்ஜெட்டில் மோஷன் கேப்சருடன் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் ‘ஆதிபுருஷ்’ இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Adipurush
AdipurushTwitter

படம் வெளியான திரையரங்குகளின் வாசல்களில் பிரபாஸ் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கலவையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்று வருகிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் திரையரங்கு ஒன்றில் ‘ஆதிபுருஷ்’ படம் பார்த்துவிட்டு வந்த இளைஞர் ஒருவர், அங்கே திரையரங்கு வாசலில் பார்வையாளர்களிடம் கருத்துக்கேட்க கூடியிருந்த யூட்யூப் விமர்சகர்கள், செய்தியாளர்கள் படம் எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.

ஆதிபுருஷ் படம் குறித்து புதிய தலைமுறை வெளியிட்ட திரைவிமர்சனத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.. Adipurush review | இதுதான் அந்த 500 கோடி பிரமாண்டமா ஆதிபுருஷ் டீம்..?https://www.puthiyathalaimurai.com/cinema/movie-review/adipurush-review-even-bgm-cant-save-this-poor-vfx-mythological-cinema

அதற்கு அவர், படம் நல்லாவே இல்லை என்று சொல்கிறார். மேலும் பிரபாஸ் நடிப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதும், “பிரபாஸ் அண்ணா நடிப்பு பத்தி பேசல. படம் முழுவதும் 3டி பிரபாஸ் ஆகவே காட்டியிருக்காங்க. ‘ஆச்சார்யா’ படத்துல சிரஞ்சீவி எப்படி காட்டினாங்களோ, அப்படியே இந்தப் படத்துல காட்டியிருக்காங்க. அனுமன், பின்னணி இசை தவிர படத்தில் ஒன்றுமே இல்லை. பிரபாஸ்-க்கு இந்த கதாபாத்திரம் பொருத்தமாகவே இல்லை. ‘பாகுபலி’ படத்தில் பிரபாஸ் அரசர் போன்று இருந்தார். அந்தப் படத்தில் ஒரு ராயல்ட்டி லுக் இருந்தது. ஆனால், இந்தப் படத்தில் இயக்குநர் ஓம் ராவத், பிரபாஸ்-ஆ ஒழுங்கா காட்டவில்லை” என்றுக் கூறினார்.

இதனைக் கேட்டுக்கொண்டிருந்த பிரபாஸ் ரசிகர்கள் சிலர், கண்ணாடி போடாமல் படம் பார்த்ததாக அந்த நபரை சரமாரியாக பேசி வெளியே போகுமாறு திட்டியதுடன், பின்னர் அவரைப் பிடித்து அடித்து துவம்சம் செய்தனர். படம் பற்றிய விமர்சனம் சேகரிக்க சென்றவர்கள் தலையிட்டு அந்த நபரை அவர்கள் மீட்டு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, பிரபாஸ் ரசிகர்கள் செய்த செயலுக்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. உண்மையான கருத்தை கூட உரிமையில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆதிபுருஷ் படம் குறித்து புதிய தலைமுறை வெளியிட்ட திரைவிமர்சனத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.. Adipurush review | இதுதான் அந்த 500 கோடி பிரமாண்டமா ஆதிபுருஷ் டீம்..?https://www.puthiyathalaimurai.com/cinema/movie-review/adipurush-review-even-bgm-cant-save-this-poor-vfx-mythological-cinema

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com