சல்மான்கானுடன் இணைகிறார் பிரபாஸ்...  சென்னை எக்ஸ்பிரஸ் இயக்குநரின் மெகா ப்ளான்!

சல்மான்கானுடன் இணைகிறார் பிரபாஸ்... சென்னை எக்ஸ்பிரஸ் இயக்குநரின் மெகா ப்ளான்!

சல்மான்கானுடன் இணைகிறார் பிரபாஸ்... சென்னை எக்ஸ்பிரஸ் இயக்குநரின் மெகா ப்ளான்!
Published on

சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களைத் தந்த பாலிவுட்டின் மெஹா ஹிட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி. கமர்ஷியல் ஹிட்டடிப்பதில் வல்லவரான இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானையும், பாகுபலி பிரபாஸையும் வைத்து ஒருபடத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். 
பாகுபலி ஹிட்டுக்குப்பிறகு இந்திய சினிமா உலகமே கவனிக்கும் ஸ்டாராகி விட்டார் பிரபாஸ். தென்னிந்திய மார்க்கெட்டையும் பிடித்து விடலாம் என்பதால் பாலிவுட் இயக்குநர்களின் பார்வை பிரபாஸ் மீது பதிந்து வருகிறது. தற்போது சாஹோ படத்தில் நடித்து வரும் பிரபாஸுக்கு தென்னிந்தியாவில் மார்க்கெட் உயர்ந்திருப்பதைப்போல பாலிவுட்டில் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை உடைத்தெரியும் சல்மான்கானின் மார்க்கெட்டும் இணைந்தால் அந்தப்படம் வசூலில் சாதனையை எட்டும் என்பதால் இருவரையும் இணைத்து படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறாராம் ரோஹித் ஷெட்டி.  பிரபாஸ் நடித்து வரும் படங்களை முடித்து விட்டு, சல்மான்கான் ஒப்புக்கொண்டுள்ள படங்களையும் முடித்துவிட்டு வரும்போது இருவரையும் வைத்து படப்படிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளாராம் ரோஹித் ஷெட்டி. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com