\
அதிர்ஷ்டம் என்பது இதுதானோ..? பிரபாஸை இயக்கும் பிரபுதேவா!

அதிர்ஷ்டம் என்பது இதுதானோ..? பிரபாஸை இயக்கும் பிரபுதேவா!

அதிர்ஷ்டம் என்பது இதுதானோ..? பிரபாஸை இயக்கும் பிரபுதேவா!
Published on

பாகுபலி புகழ் பிரபாஸ், பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகுபலி படம் மூலம் இந்திய ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்ததோடு, இயக்குனர்களின் மனதையும் தொட்டுவிட்டார் பிரபாஸ். பல முன்னணி இயக்குனர்கள் பிரபாஸை வைத்து படம் எடுக்க முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும், பாகுபலி படத்திற்கு பின் சுஜீத் இயக்கத்தில் "சாஹே" என்னும் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

இப்படத்திற்கு பின் பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடன பயிற்சியாளராக இருந்து நடிகராக மாறி இயக்குனராக உருவெடுத்தவர் பிரபுதேவா. நாட்டில் அதிகப்படியான சம்பளம் வாங்கும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பிரபாஸ் சினிமா துறைக்கு அறிமுகமான புதிதில் இருந்தே பிரபுதேவாவுடன் நன்கு நட்பு கொண்டிருந்தாராம். அதனடிப்படையில் பிரபாஸை வைத்து பிரவுதேவா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, பிரபுதேவா இயக்கத்தில் வெளியாக ' அக்ஷன் ஜாக்சன்' என்கிற ஹிந்தி படத்தில் பிரபாஸ் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com