சினிமா
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை கைது செய்த டெல்லி போலீஸ்
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை கைது செய்த டெல்லி போலீஸ்
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை டெல்லி காவல்துறையினர் திடீரென கைது செய்தனர்.
சென்னை அண்ணா நகரிலுள்ள வீட்டிற்கு வந்த டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர், சீனிவாசனை கைது செய்திருக்கின்றனர். 2013ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் ரூ.1,000 கோடி கடன் வாங்கித்தருவதாக ரூ.10 கோடி கமிஷன் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக சீனிவாசன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்தபின் அவர் தலைமறைவாகிவிட்டதாகவும், தற்போது நீதிமன்ற உத்தரவுபடி கைது செய்திருப்பதாகவும் டெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் சீனிவாசனை ஆஜர்படுத்திய காவல்துறையினர், டெல்லி அழைத்துச்செல்ல உள்ளனர்.