\
மடோனா கெஸ்ட், கவுதம் மேனன் நெக்ஸ்ட்

மடோனா கெஸ்ட், கவுதம் மேனன் நெக்ஸ்ட்

மடோனா கெஸ்ட், கவுதம் மேனன் நெக்ஸ்ட்
Published on

தனுஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம், ப.பாண்டி. அதாவது, பழனிச்சாமி பாண்டி. ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கிறார். ஜோடியாக ரேவதி நடித்துள்ளார். மற்றும் பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் மடோனா செபாஸ்டின் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அவரை அடுத்து கவுதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் பாலாஜி மோகன், ரோபோ சங்கர், திவ்யதர்ஷினி உட்பட பலர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

சென்னையில் இந்தப் படத்தை தணிக்கை குழு நேற்று பார்த்து, ‘யூ’ சான்றிதழ் வழங்கியது. நடிகர் ராஜ்கிரணை, தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா முதன் முதலில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய படம், 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ம் தேதி வெளியானது. இப்போது அவர் மகன் தனுஷ், ராஜ்கிரணை ஹீரோவாக வைத்து இயக்கும் ப.பாண்டி, ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாவது எதேச்சையான ஒன்று.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com