தசரா அன்று நடைபெறும் ‘விஜய் 66’ படத்தின் பூஜை?

தசரா அன்று நடைபெறும் ‘விஜய் 66’ படத்தின் பூஜை?
தசரா அன்று நடைபெறும் ‘விஜய் 66’ படத்தின் பூஜை?

தசரா பண்டிகையையொட்டி ‘விஜய் 66’ படத்தின் பூஜை நடைபெறவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஆறாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில், அடுத்ததாக விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் ’விஜய் 66’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். வம்சி முதன்முறையாக இயக்குநராக அறிமுகமான பிரபாஸின் ’முன்னா’ படத்தை தில் ராஜுதான் தயாரித்தார்.அதோடு, வம்சி இயக்கத்தில் வெளியான ராம் சரண் - அல்லு அர்ஜுனின் ‘யுவடு’ படத்தையும், மகேஷ் பாபுவின் ‘மகரிஷி’ படத்தையும் தில் ராஜுதான் தயாரித்தார்.

இந்த நிலையில், வம்சி இயக்கும் விஜய் படத்தையும் தில் ராஜுதான் தயாரிக்கிறார். தசரா பண்டிகையையொட்டி வரும் அக்டோபர் 15 ஆம் தேதி ‘விஜய் 66’ படத்தின் பூஜை தொடங்கவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com