\
வைஜயந்திமாலா சுயசரிதை: நடிகை பூஜா குமார் ஆசை

வைஜயந்திமாலா சுயசரிதை: நடிகை பூஜா குமார் ஆசை

வைஜயந்திமாலா சுயசரிதை: நடிகை பூஜா குமார் ஆசை
Published on

மூத்த நடிகை வைஜயந்தி மாலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நாயகியாக நடிக்க ஆசை என்று நடிகை பூஜா குமார் தெரிவித்தார்.

தமிழில் காதல் ரோஜாவே, விஸ்வரூபம், உத்தமவில்லன், மீன் குழம்பும் மண் பானையும் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் பூஜா குமார். தற்போது நெட் பிளிக்ஸிற்காக பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘த இன்விசிபிள் மாஸ்க் ’ என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். 

அவர் கூறும்போது, ‘என்னுடன் ஆதீத்யா ஷீல் என்னும் நடிகர் நடித்திருக்கிறார். இந்த படம் ஜனவரியில் வெளியாகும். இது தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகலாம் என்றும் நம்புகிறேன். இதில் நடுத்தர குடும்பத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். 

விஸ்வரூபம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ’கமல்ஹாசனிடம் ’மருதநாயகம்’ படத்தை எப்போது தொடங்கவிருக்கிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறேன். அவர், ‘அது போன்ற படங்களுக்கு கடின உழைப்பு, நீண்ட கால தயாரிப்பு, முன் தயாரிப்பு, ஆய்வு பணிகள் என அதிக உழைப்பை கேட்கும். அதனால் அதற்கு காலம் தான் பதில் சொல்லும் ’ என்று என்னிடம் பகிர்ந்திருக்கிறார். அவர் மருதநாயகத்தை தொடங்கினால், வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். 

தற்போது சரித்திர பின்னணி படங்கள், பீரியட் படங்கள், சுயசரிதை படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் வைஜயந்தி மாலா பாலியின் வாழ்க்கை, இந்தி நடிகை ரேகா ஆகியோரின் சுயசரிதை திரைப்படமானால் அதில் நாயகியாக நடிக்க ஆசை. முழு நீள சரித்திர பின்னணி கதையில் குறிப்பாக, ஜான்சி ராணியின் கதையில் நடிக்க விரும்புகிறேன். 

திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படும் ‘மீ டூ ’ ஹேஸ்டேக்கில், தங்கள் பாலியல் தொல்லைகளை பகிர்ந்துகொள்ளும் நடிகைகள் மற்றும் பிரபலங்களின் துணிச்சலை பாராட்டுகிறேன்’ என்றார் பூஜா குமார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com