\
'விஜய் 65' நாயகியாகிறார் பூஜா ஹெக்டே?

'விஜய் 65' நாயகியாகிறார் பூஜா ஹெக்டே?

'விஜய் 65' நாயகியாகிறார் பூஜா ஹெக்டே?
Published on

விஜய் நடிக்கவுள்ள 65-வது படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து  ‘கோலமாவு கோகிலா’  ‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய  ‘நெல்சன் திலீப்குமார்’ இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கதை விவாதப்பணி சென்னையில் உள்ள பிரபல விடுதியில் நடைபெற்று வருகிறது.

அதேபோல் படத்தின் நாயகிக்கான தேர்வும் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் மாளவிகா மோகனன், ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் நடித்ததால் இயக்குனர் அவரை தவிர்த்ததாகச் சொல்லப்படுகிறது. 

மேலும் ராஷ்மிகா மந்தனாவிற்கு கால்ஷீட் பிரச்னை இருப்பதால் பூஜா ஹெக்டேவை நாயகியாக தேர்வு செய்துள்ளனர் என கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே தமிழில் ஜீவா நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் வெளியான  ‘முகமூடி’ படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com