\
பீஸ்ட் நடனப் பயிற்சியில் பூஜா ஹெக்டே: சிம்ரன், தமன்னா வரிசையில் விஜய்க்கு டஃப் கொடுப்பாரா?

பீஸ்ட் நடனப் பயிற்சியில் பூஜா ஹெக்டே: சிம்ரன், தமன்னா வரிசையில் விஜய்க்கு டஃப் கொடுப்பாரா?

பீஸ்ட் நடனப் பயிற்சியில் பூஜா ஹெக்டே: சிம்ரன், தமன்னா வரிசையில் விஜய்க்கு டஃப் கொடுப்பாரா?
Published on

விஜய்யின் ‘பீஸ்ட்’ பாடல் காட்சிக்காக நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டேவின் புகைப்படம் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது.

’மாஸ்டர்’ வெற்றிக்குப் பிறகு விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இதன் முதற்கட்ட படபிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. அதனையடுத்து, சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைபெறும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில்  விஜய்- பூஜா ஹெக்டே பாடல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.  ’ரெளடி பேபி’, ‘புட்ட பொம்மா’ புகழ் ஜானி மாஸ்டர் நடன இயக்குநராக பணிபுரிகிறார்.

பொதுவாகவே, டான்ஸ் மாஸ்டர்களையே ஓவர்டேக் செய்யும் அளவுக்கு  நடனம் ஆடுவார் என்ற பாராட்டை பெற்றவர் விஜய்.  ஆனால், அவரையும் தாண்டி சிம்ரன், தமன்னா நடனம்தான் விஜய்க்கு ஈக்குவலாக ஆடியதாக கவனம் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் வரிசையில் பூஜா ஹெக்டேவும் இடம்பெறுவாரா என்பது பாடல் காட்சிகள் வெளியான பிறகுதான் தெரியும்.

இந்நிலையில், பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், ’டான்ஸ் ரிகர்சல் பீஸ்ட்’ என்று பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில், அவர் காலை மடக்கி ஒற்றைக்காலில் நிற்கும் புகைப்படம் சிம்ரன், தமன்னாவின் வரிசையில் இடம்பெற்று ’விஜய்க்கே நடனத்தில் டஃப் ஃபைட் கொடுப்பேன்’ என்று ஒற்றைக்காலில் நிற்பதுபோல் இருக்கிறது அவரது இந்த புகைப்படம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com