கங்கனா ரனாவத் பாதுகாப்புக்காக பூஜை: அம்மாவின் அன்பில் நெகிழ்ந்த கங்கனா
பாலிவுட் மற்றும் தமிழ் நடிகையுமான கங்கனா ரனாவத் பாதுகாப்புக்காக, அவரது அம்மா பூஜை செய்ததை கங்கனா ரனாவாத் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.
சமீபகாலமாக நடிகை கங்கனா ரனாவத், பிரதமர் மோடி ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர், மட்டுமல்லாமல் அவரது தங்கையும் மோடிக்கு ஆதரவாக பேசியயிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைந்ததையோட்டி வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் உள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். தொடர்ச்சியாக பாலிவுட் நடிகர்களையும் தயாரிப்பாளர்களையும் குற்றம்சாட்டியிருந்தார். அவருக்கும் நடிகை டாப்சிக்கும் சண்டையே வந்துவிட்டது. தொடர் சர்ச்சையில் சிக்கியதால், கங்கனா ரனாவத் அம்மா வீட்டிலேயே, புரோகிதர்களை அழைத்து வந்து அவரை அமர வைத்து பதினைந்தாயிரம் மகாமிருந்துந்திய மந்திரங்களை சொல்ல வைத்துள்ளார்.

