\
”1..2..3..4.. தக்கிட தக்கிட தக்தம்” - ஸ்வரம் பாடி PS-1 அட்பேட் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

”1..2..3..4.. தக்கிட தக்கிட தக்தம்” - ஸ்வரம் பாடி PS-1 அட்பேட் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

”1..2..3..4.. தக்கிட தக்கிட தக்தம்” - ஸ்வரம் பாடி PS-1 அட்பேட் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!
Published on

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை நினைவாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அதன்படி, செப்டம்பர் 30ம் தேதி உலகெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாக இருக்கிறது.

இதற்கான டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிர வைத்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், பிரபு என பல நட்சத்திர ஜாம்பவான்கள் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் பொன்னியின் செல்வன்-1ன் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியிடப் போவதாகக் குறிப்பிட்டு அதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ட்ரம்ஸ் சிவமணி ஆகியோர் ரெக்கார்டிங் பணியில் இருந்த வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில் ஏ.ஆர்.ரஹ்மான் “தக்கிட தக்கிட தக்தம்” என ஸ்வரம் பாடுவதும், அதற்கு இணையாக ட்ரம்ஸ் சிவமணி வாசிப்பதும் வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது. தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ALSO READ: 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com