ரோல்ஸ்ராய் கார் ஷோரூமை தேடிய படக்குழு!

ரோல்ஸ்ராய் கார் ஷோரூமை தேடிய படக்குழு!

ரோல்ஸ்ராய் கார் ஷோரூமை தேடிய படக்குழு!
Published on

நட்டி, இந்தி நடிகை ருஹி சிங், அதுல் குல்கரினி, முண்டாசுபட்டி ராமதாஸ் உட்பட் பலர் நடிக்கும் படம், ‘போங்கு’ .

ஆர்.டி.இன்பினிட்டி டீல் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் இணைத்து தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவு, மகேஷ் முத்துசாமி. இசை, ஸ்ரீகாந்த் தேவா. கதை, திரைக்கதை, வசனம் எழுதி தாஜ் இயக்குகிறார். இவர் பிரபல ஆர்ட் டைரக்டர் சாபுசிரிலிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

படம் பற்றி அவர் கூறும்போது, ’இது கார் திருடர்களின் கதை. ரோல்ஸ் ராய், ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற உயர் ரக கார்களை திருடும் கும்பலை பற்றிய கதை. படத்துக்காக ரோல்ஸ்ராய் காரின் ஷோரூமை பல இடங்களில் தேடி, பிறகு அகமதாபாத்தில் பிடித்தோம். அங்கு சிறப்பு அனுமதி வாங்கி படமாக்கியுள்ளோம். படத்துக்காக அதிவேகமாக கார் ஓட்டி ஆச்சரியப்படுத்தினார் நட்டி. சாலைகளில் எப்படி வாகனங்கள் பறக்குமோ அது மாதிரி திரைக்கதையும் பரபரப்பாக இருக்கும். ’சதுரங்க வேட்டை’ படத்தில் நட்டியின் கேரக்டரை தாண்டும் விதமாக இந்தப் படம் இருக்கும். விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com