பாவனா வழக்கில் கைதான திலீபுடன் செல்ஃபி எடுத்த போலீசார்

பாவனா வழக்கில் கைதான திலீபுடன் செல்ஃபி எடுத்த போலீசார்
பாவனா வழக்கில் கைதான திலீபுடன் செல்ஃபி எடுத்த போலீசார்

நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீபுடன் போலீசார் எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீபை கேரள காவல்துறையினர் ஜூலை 10ல் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திலீப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஆலுவா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், ஜாமீன் கேட்டு அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. ஆலுவா கிளைச் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன் நடிகர் திலீபுடன் போலீசார் இருவர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அந்த செல்ஃபி சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com