\
ஓவியாவுக்கு போலீஸ் சம்மன்!

ஓவியாவுக்கு போலீஸ் சம்மன்!

ஓவியாவுக்கு போலீஸ் சம்மன்!
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்ற வழக்கில் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவு பெருகின. இந்நிலையில் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாலாஜி என்ற வழக்கறிஞர் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், தற்கொலை விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விளக்க, ஸ்டேஷனில் ஆஜராகும்படி ஓவியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். ஓவியாவின் மேனேஜரிடம் அவர் விசாரித்தபோது, தற்கொலைக்கு அவர் முயற்சிக்கவில்லை என்று தெரிவித்ததாக இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com