\
எங்கே அந்த மெமரி கார்ட்? திலீப் வழக்கில் திணறும் போலீஸ்

எங்கே அந்த மெமரி கார்ட்? திலீப் வழக்கில் திணறும் போலீஸ்

எங்கே அந்த மெமரி கார்ட்? திலீப் வழக்கில் திணறும் போலீஸ்
Published on

நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளான வழக்கில், வீடியோ எடுக்கப்பட்ட மெமரி கார்ட் கிடைக்காததால் போலீஸ் திணறி வருகின்றனர். 

கேரளாவில் பிரபல நடிகை பிப்ரவரி மாதம் 17-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

முதலில் பணம் கேட்டு மிரட்டுவதற்காகவே பாவனா கடத்தல் நடந்ததாக பல்சர் சுனில் தெரிவித்தார். பிறகு பாவனா கடத்தல் பின்னணியில் ஒரு நடிகருக்கு தொடர்பு இருப்பதாக கூறியதால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. பின்னர் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதனால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த வழக்குத் தொடர்பாக திலீப்புக்கு நெருங்கியவர்கள் மற்றும் அவரின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர், இப்போதைய மனைவி காவ்யா மாதவன் உட்பட பலரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் போலீசார் அடுத்த மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருக்கின்றனர். 

இந்நிலையில் நடிகை பாலியல் வன்முறைக்குள்ளான போது எடுக்கப்பட்ட செல்போன் வீடியோ மற்றும் அதன் மெமரி கார்ட் இன்னும் கிடைக்கவில்லை. அதை திலீப்புக்கு வேண்டியவர்கள் அழித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் திணறி வரும் போலீசார் அது தொடர்பான விசாரணையை இப்போது முடுக்கி விட்டுள்ளனர். 


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com