சமந்தாவை காணக்குவிந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

சமந்தாவை காணக்குவிந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

சமந்தாவை காணக்குவிந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
Published on

கிருஷ்ணகிரியில் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த நடிகை சமந்தாவை காண ஏராளமானோர் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து ரசிகர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

கிருஷ்ணகிரியில் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகை சமந்தா வந்திருந்தார். அந்நேரத்தில் சமந்தாவை காணவும், அவருடன் செல்ஃபி எடுக்கவும் ஏராளமான ரசிகர்கள் முந்தியடித்து சென்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையத்து காவல்துறையினர் தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர்.

போலீசாரின் தடியடி காரணமாக கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே நகைக்கடை திறப்பு நிகழ்ச்கிக்கு பின் சமந்தா தனது காரில் பத்திரமாக புறப்பட்டுச் சென்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com