\
சித்ரா தற்கொலைக்கு யார் காரணம்? - காவல்துறை தகவல்

சித்ரா தற்கொலைக்கு யார் காரணம்? - காவல்துறை தகவல்

சித்ரா தற்கொலைக்கு யார் காரணம்? - காவல்துறை தகவல்
Published on: 

நடிகை சித்ரா தற்கொலைக்கு கணவர், தாய் என இரண்டு தரப்பிலும் கொடுத்த மன அழுத்தமே காரணம் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் விடுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நடிகை சித்ராவின் மரணம் கொலையா தற்கொலையா என விவாதிக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையின் முதல்கட்ட தகவலின்படி சித்ரா தற்கொலைதான் செய்துக்கொண்டதாக காவல்ததுறை தகவல் தெரிவித்தது. அத்துடன் சித்ராவின் கன்னத்தில் இருந்த நகக்கீறல் அவருடையதுதான் என்றும் காவல்துறை தெரிவித்தது.


இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலைக்கு கணவர், தாய் என இரண்டு தரப்பிலும் கொடுத்த மன அழுத்தமே காரணம் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கணவர் ஹேம்நாத் குடித்துவிட்டு சித்ராவிடம் பிரச்னை செய்துள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com