\
அவர் இல்லாம, போக்கிரி 2 வா?

அவர் இல்லாம, போக்கிரி 2 வா?

அவர் இல்லாம, போக்கிரி 2 வா?
Published on

விஜய், அசின் நடித்து தமிழில் சூப்பர் ஹிட்டான படம், ‘போக்கிரி’. பிரபுதேவா இயக்கியிருந்த இந்தப் படம் தெலுங்கில் வெளியான போக்கிரி படத்தின் ரீமேக். இந்த போக்கிரியை இந்தியில் ’வான்டட்’ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார் பிரபுதேவா. சல்மான்கான் ஹீரோவாக நடித்திருந்த இந்தப்படம் அங்கும் சூப்பர் ஹிட். போனி கபூர் தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று போனி கபூர், பிரபுதேவா, சல்மான் ஆகியோர் மீது பீர்பால் சிங் ராணா என்பவர் அப்போது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபற்றி போனி கபூரிடம் கேட்டபோது, ’வான்டட்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் எண்ணம் இருக்கிறது’ என்றார்.
சல்மான் கான், இரண்டாம் பாக கதையோடு வருமாறு பிரபுதேவாவிடம் கேட்டிருப்பதாகவும் அவர் கதை தேடிவருவதாகவும் கூறப்படுகிறது. ’அப்படி கதை அமைந்தால், பிரபுதேவா இல்லாமல் அந்த இரண்டாம் பாகம் இருக்காது’ என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com