சினிமா
நடிகர் வடிவேல் வெளியிட்ட இயக்குநர் மாரி செல்வராஜின் கவிதைத் தொகுப்பு
நடிகர் வடிவேல் வெளியிட்ட இயக்குநர் மாரி செல்வராஜின் கவிதைத் தொகுப்பு
இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதிய கவிதைத் தொகுப்பை நடிகர் வடிவேலு வெளியிட்டார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது 'மாமன்னன்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் மாரி செல்வராஜ் எழுதிய 'உச்சினினென்பது' என்ற கவிதைத் தொகுப்பை நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ளார்.
மாரிசெல்வராஜ் இதற்கு முன்பு தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் ஆகிய இரண்டு நூல்களை எழுதியுள்ளார். இந்த நிலையில் அவர் எழுதிய முதல் கவிதைத் தொகுப்பை நடிகர் வடிவேலு மாமன்னன் படப்பிடிப்பில் வெளியிட்டுள்ளார்.

