\
”காதலன் வணங்குகிறேன் கவியரசே: உன் வரிகளோடு வாழ்கிறோம் நாங்கள்”: வைரமுத்து

”காதலன் வணங்குகிறேன் கவியரசே: உன் வரிகளோடு வாழ்கிறோம் நாங்கள்”: வைரமுத்து

”காதலன் வணங்குகிறேன் கவியரசே: உன் வரிகளோடு வாழ்கிறோம் நாங்கள்”: வைரமுத்து
Published on

”உன் பிறந்தநாளில் காதலன் வணங்குகிறேன் கவியரசே. உன் வரிகளில் வாழ்கிறாய் நீ. உன் வரிகளோடு வாழ்கிறோம் நாங்கள்” என்று கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

காலத்தால் அழியாமல் புகழ்பெற்றிருப்பது திருக்குறள், ஆத்திச்சூடி போன்றவை மட்டுமல்ல. கண்ணதாசன் பாடல்களும்தான். தமிழ் சினிமாவையே தனது பாடல்களால் கால் நூற்றாண்டுகாலம் கோலோச்சியவர். 2கே கிட்ஸ் மத்தியிலும் இவரது காதல் பாடல்கள் ஹிட் அடித்தவை. கவிஞர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகத்தன்மை கொண்ட கண்ணதாசனின் 95 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”உன் பிறந்தநாளில் காதலன் வணங்குகிறேன் கவியரசே! பாட்டு மொழிக்கு உயரமும் ஒய்யாரமும் தந்தவனே! உன் வரிகளில் வாழ்கிறாய் நீ உன் வரிகளோடு வாழ்கிறோம் நாங்கள். நீ நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை” என்று நினைவுகூர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்,

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com